ஆண
ஆண் பெண் தர்க்கம்
கெஞ்சலும் மிஞ்சலும்
ஐந்நூறு மைல்க டந்து
அம்மா உன்னைத் தஞ்சமென்று
அலங்கோலப் பட்டு வந்தேன்
ஆதரிக்க வேணும் தாயே
அன்னமே பொன்னம்மா
கண்ணி ரண்டும்
சோருதடி
அன்னமே
ஏ ஏ.
1
ஆரடா நீப யலே
அநியா யமா அலப்புறியே
போடாநீ சொல்லடா
பெரிய பேச்சுப் பேசாதேடா
வாது செய்யா தடா
வந்தவழி போய்ச்சேரடா
சேரடா
ஆ ஆ.
2
அடாபு டாண்ணு என்னை
அநியாயமா ஏன்பேசுறாய்
அத்தை மகள்னுதான் உன்னை
ஆவலாநான் பார்க்க
வந்தேன்
அன்னமே பொன்னம்மா
கண்ணி ரண்டும்
சோருதடி
அன்னமே
ஏ ஏ.
3
அத்தை மகள்னு நீஎன்னை
அதிகாரமாச் சொன்னையேடா
உங்கப்பன் உங்கம்மா
ஊரெதுடா
வெட்கங் கெட்ட பையாநீ
வாதுசெய் யாதேடா
வந்தவழி போய்ச்சேரடா
சேரடா
ஆ ஆ.
4
|