பக்கம் எண் :

அப

60

மலையருவி

அப்பன்பேர் ஆறுமுகம்
        ஆத்தாள்பேர் ஆராயம்மா
    என்பேரு ஏகாம்பரம்
        எங்கஊர் ஏர்க்காடம்மா
    அன்னமே பொன்னம்மா
        கண்ணி ரண்டும் சோருதடி
                    அன்னமே ஏ ஏ.

5

கொள்வினையும் கொடுப்பினையும்
        கொண்டுவந்த குறப்பயலே
    கொஞ்சங்கூட நெஞ்சஞ்சாமல்
        வஞ்சகமாய்ப் பேசுறையே
    வாதுசெய் யாதேடா
        வந்தவழி போய்ச் சேரடா
                        சேரடா ஆ ஆ.
            

6

கண்ணேஎன் கண்மணியே
        கல்நெஞ்சுக் காரியே
    சொன்னேன் என்காரி யத்தைச்
        சொல்லால் அடிக்கிறையே
    அன்னமே பொன்னம்மா
        கண்ணி ரண்டும் சோருதடி
                        அன்னமே ஏ ஏ.
             

7

ஏண்டாநீ இங்கே வந்தாய்
        இரப்பிரந்த பறைப்பயலே
    வேண்டாம் உனக்குவம்பு
        விரைவாப் போயிடு நம்பு
    வாதுசெய் யாதேடா
        வந்தவழி போய்ச்சேரடா
                        சேரடா ஆ ஆ.
               

8

வாணாளை வீணாக்காமல்
        வம்பாக்கஷ் டப்படாமல்
    போனால் நல்லதடாப்பா
        பொழுது விழுகுமுன்னே