பக்கம் எண் :

ஆண் பெண் தர்க்கம்

61

வாதுசெய் யாதேடா
        வந்தவழி போய்ச்சேரடா
                    சேரடா ஆ ஆ
.                

9

அஞ்சு வயசுமுதல்
        அரும்பாடு பட்டுநானும்
    ஆயிரம் ரூபா சேர்த்தேன்
        அருமைக் கிளியைக் கொள்ள
    அன்னமே பொன்னம்மா
        கண்ணி ரண்டும் சோருதடி
                    அன்னமே ஏ ஏ.      
      

10

    அஞ்சு வயசுமுதல்
        அரும்பாடு பட்டால் என்ன
    மிஞ்சிநீ பேசா தேடா
        நெஞ்சைப் பிளந்திடுவேன்
    வாதுசெய் யாதேடா
        வந்தவழி போய்ச்சேரடா
                        சேரடா ஆ ஆ.
               

11

ஆயிரம் ரூபாநீ சேர்த்தால்
        ஆருக் கென்ன லாவமடா
    ஆள்தப்பிக் கப்பாருடா
        அல்லா விட்டால் ஆபத்தடா
    வாதுசெய் யாதேடா
        வந்தவழி போய்ச்சேரடா
                        சேரடா ஆ ஆ.        
       

12

கண்ணேன்னும் கண்மணின்னும்
        கிளியேன்னும் புளியேன்னும்
    சொன்ன நாக்கை அறுத்துடுவேன்
        சொல்லாமல் ஓடிடடா
    வாதுசெய் யாதேடா
        வந்தவழி போய்ச்சேரடா

சேரடா ஆ ஆ.
                                                     

13