பக்கம் எண் :

என

62

மலையருவி

என்குலமும் உன்குலமும்
        என்சொத்தும் உன்சொத்தும்
    ஏணி வைத்தால் எட்டுமாடா
        எருமை மாட்டுப் பயலே
    வாதுசெய் யாதேடா
        வந்தவழி போய்ச் சேரடா
                    சேரடா ஆ ஆ.       
    

14

ஒருத்திக்கு ஒருமகண்டி
        உன்னைநம்பி வந்தவண்டி
    பொறுமை பொறுத்தவண்டி
        போகவர ஏசாதேடி
    அன்னமே பொன்னம்மா
        கண்ணி ரண்டும் சோருதடி
                    அன்னமே ஏ ஏ. 
           

15

ஆளிலொரு அழகன் நாண்டி
        ஆயிரரூபா சொத்துக் காரண்டி
    பெரிய வீட்டுக் காரரில்எல்லாம்
        பெரியதலை நான்தானடி
    அன்னமே பொன்னம்மா
        கண்ணிரண்டும் சோருதடி
                      அன்னமே ஏ ஏ.    
            

16

பெரிய தலையா இருந்தாலும்
        சின்னத் தலையா இருந்தாலும்
    பெரிசல்லடா எனக்கு மட்டும்
        போய்ப்பயலே ஓடிப் போடா
    வாதுசெய் யாதேடா
        வந்தவழி போய்ச்சேரடா
                        சேரடா ஆ ஆ.  
                      

17

முச்சந்தி ரோட்டுப் பக்கம்
        மூணுகுழி நிலமும் வாங்கி
    மூணுகுழி நிலத்தை வெட்ட
        மூணுநூறு ஆள்பிடிச்சேன்