பக்கம் எண் :

அன

ஆண் பெண் தர்க்கம்

63

அன்னமே பொன்னம்மா
        கண்ணிரண்டும் சோருதடி
                    அன்னமே ஏ ஏ. 
               

18

முச்சந்தி ரோட்டி லேநீ
        முக்காடு போட்டால் என்ன
    மூணுநூறு ஆளு உன்னை
        மொட்டை அடிச்சால் என்ன
    வாதுசெய் யாதேடா
        வந்தவழி போய்ச்சேரடா
                        சேரடா ஆ ஆ.    
           

19

பெருமைநீ பண்ணாதேடி
        பெருமைப் பேச்சுப் பேசாதேடி
    அருமை குலைக்கா தேடி
        அட்ட காசஞ் செய்யாதேடி
    அன்னமே பொன்னம்மா
        கண்ணி ரண்டும் சோருதடி
                        அன்னமே ஏ ஏ.   
         

20

பொன்னேநீ பேசி னாலும்
        என்னைநீ ஏசி னாலும்
    என்னைநான் மறப்பே னோடி
        பின்னேநான் போவே னோடி
    அன்னமே பொன்னம்மா
        கண்ணி ரண்டும் சேருதடி
                        அன்னமே ஏ ஏ.    
        

21

நான்யாரு நீயாரடா
        சும்மா இங்கே நிற்காதேடா
    சாமர்த்தியம் காட்டா தேடா
        ஏமாந்து போவே னோடா
    வாதுசெய் யாதேடா
        வந்தவழி போய்ச்சேரடா
                        சேரடா ஆ ஆ.

22