|
நல
நல்ல சகுனத்திலே
நாட்டாரெல் லாமறிய
நாம்ரெண்டு பேருமே - கண்ணுத்தங்கமே
சம்மணங்கால் போட்டுட்காரக்
- கட்டித்தங்கமே.
72
பூசாரிக்கும் நமக்கும்
பொதுவாத் திரையுங்கட்டி
சாஸ்திர ஒழுங்குப்படி -
கண்ணுத்தங்கமே
சமாதானத் தாலிகட்டக்
- கட்டித்தங்கமே.
73
தாம்தாமிண் ணொருபக்கம்
தீம்தீமிண் ணொருபக்கம்
நாலாபக்க மும்முழங்கக் -
கண்ணுத்தங்கமே
நாம்நமஸ் காரஞ்சொல்வோம்
- கட்டித்தங்கமே.
74
நம்மரெண்டு பேர்மேலேயும்
வந்தசின்னப்
பிள்ளையெல்லாம்
வாரிவாரிப் பூஇறைக்கக்
- கண்ணுத்தங்கமே
மாறிமாறிப் பாட்டுப்பாடக்
- கட்டித்தங்கமே.
75
கலியாணப் பாட்டவுங்க
கனிவாய்த்தான் படிக்கையிலே
கண்எல்லாம் நம்மேலேதான்
- கண்ணுத்தங்கமே
கடவுள்அரு ளாலேதான்
- கட்டித்தங்கமே.
76
ஆலாத்தி எடுக்கத்தானும்
அத்தைமாரு முன்வரவே
காலாட்டிப் போவோம்நாம
- கண்ணுத்தங்கமே
கவலையில்லா மல்போவோம்
- கட்டித்தங்கமே.
77
|