பக்கம் எண் :

வ

ஆண் பெண் தர்க்கம்

95

வீட்டிலிருக்கும் கிழடுகட்டை
        வேலையெல்லாம் நடத்தையிலே
    நாட்டிலிருக்கும் மனிசரெல்லாம் - கண்ணுத்தங்கமே
        நம்மைத்தேடி வருவாங்களாம் - கட்டித்தங்கமே.       

66

புரோகிதரு சொல்லுப்படி
        பொய்ப்பந்தல் ஒண்ணுபோட்டுப்
    பொறுமையா உள்ளேஉட்கார்ந்து - கண்ணுமச்சானே
        அருமையா உச்சரிக்கணும் - மந்தரங்களை.        

67

தாம்பாளத் தட்டிலேதான்
        சாமானம் வைக்கணுமே
    என்னென்ன சாமானம்ணு - கண்ணுமச்சானே
        இப்பநான் சொல்லுவேனே - பொன்னுமச்சானே.
   

68

மல்லிகைப்பூ மருக்கொழுந்து
        நெல்அரிசி நல்லமஞ்சள்
    தாலிக்கயி றுட்படவே - கண்ணுமச்சானே
        தாலியும் வைக்கணுமே - பொன்னுமச்சானே.    
   

69

தேங்காய் பழமும்கொஞ்சம்
        தாம்பாளத் தட்டிலேவச்சு
    தாம்பூலம் சேர்த்துவச்சுக் - கண்ணுமச்சானே
        தம்பதிக்குக் கொடுக்கணுமே -
பொன்னுமச்சானே.       

70

வந்தவங்க எல்லோருக்கும்
        சந்தனமும் குங்குமமும்
    வகைவகையாக் கொடுக்கணுமே - கண்ணுத்தங்கமே
        வரிசைகளும் கொடுக்கணுமே - கட்டித்தங்கமே.       

71