பக்கம் எண் :

கல

94

மலையருவி

கலியாணத் துணிமணியை
        காரிகையே நீவாங்கணும்
    தெரியாதம் மாஎனக்குக் - கண்ணுத்தங்கமே
        சரியான வழிமுறைகள் - கட்டித்தங்கமே.      
    

60

முகூர்த்தக்காலு ஊணறதும்
        ஊர்வெற்றிலை வைக்கிறதும்
    முதல்வேலைண்ணு சொல்வாங்க - கண்ணுமச்சானே
        முன்னோர் எல்லோருமே - பொன்னுமச்சானே.     
  

61

சம்பந்தக் காரருக்குச்
        சரியான பழம்பாக்குச்
    சட்டப்படி வைக்கணுமாம் - கண்ணுமச்சானே
        திட்டவட்டஞ் செய்யணுமாம் - பொன்னுமச்சானே.
   

62

நாளுதேதி நட்சத்திரம்
        நல்லாப்பார்த்துக் குறிச்சுவச்சு
    நாகசுரக் காரனையும் - கண்ணுமச்சானே
        நயந்து அழைக்கணுமாம் - பொன்னுமச்சானே. 
      

63

கண்ணேஎன் கண்மணியே
        கலியாணத்துக்கு உண்ணம்
    என்னென்ன வேணும் அம்மணி - கண்ணுத்தங்கமே
        எனக்குச்சொல்ல ணும்விவரம் - கட்டித்தங்கமே.       

64

பூமிஎல் லாம்புகழும்
        புரோகிதருக் காளனுப்பி
    சேமலாப நேரத்தையும் - கண்ணுமச்சானே
        செம்மையா அறிஞ்சுவரணும் - பொன்னுமச்சானே.
   

65