|
New Page 1
யோக்கியமாய்ப் பேசுற
என்
யோசனையுள்ள மச்சானே
பாக்கியந்தான் நான்பெற்றேனே
- கண்ணுமச்சானே
பந்துசனமெல்
லாம்புகழப் - பொன்னுமச்சானே.
54
ஆட்டுக்கிடாய் நாலடிச்சு
ஆயிரம்பேரைக் கூப்பிட்டு
அழகான விருந்துவச்சு - கண்ணுத்தங்கமே
ஆசையைத் தீர்க்கணுமே
- கட்டித்தங்கமே.
55
ஏழைகளும் பாழைகளும்
எங்கிருந்தாலும் கூப்பிட்டு
வாழைஇலை போட்டுச்சோறு
- கண்ணுமச்சானே
வரிசையாக் கொடுக்கணுமே
-
பொன்னுமச்சானே.
56
மாமன்மார் மச்சான்மார்
மத்தவங்க எல்லாருக்கும்
மாலைகூடப் போடணுமே - கண்ணுத்தங்கமே
மரியாதைகள் செய்யணுமே
- கட்டித்தங்கமே.
57
அண்ணனுக்கும் அக்காளுக்கும்
அதிசயத் துணிவாங்கணும்
தம்பிக்கும் தங்கச்சிக்கும்
- கண்ணுமச்சானே
தாராளமாத் துணிவாங்கணும்
-
பொன்னுமச்சானே.
58
கொட்டு முழக்கத்தோடே
கொண்டாடும் வரிசைகளை
கொண்டுவந்த பேருக்கெல்லாம்
- கண்ணுத்தங்கமே
கொடுக்கணும்பதில்
சீர்வரிசை -
கட்டித்தங்கமே.
59
|