பக்கம் எண் :

பச

92

மலையருவி

பச்சைமலையி லேயிருக்கும்
        பச்சைக்கிளி யேநான்உன்னை
    பாத்துரொம்ப நாளாச்சம்மா - என்கண்ணம்மா
        மாற்றுத்தங்கத்தைத் தானம்மா -
    கண்ணுபொன்னம்மா.

48

ஆணால் அழகன்நீ
        அருமந்த ஆளியன்நீ
    தோளுக்குத் தோளும்நீ - என்கண்ணையா, உன்னைத்
        தொட்டாலும் தோசமில்லை - என்பொன்னையா.
    

49

கண்ணேநான் உன்னைக்கண்டு
        கருத்துக் கிசைந்திருக்க
    என்னதவஞ் செய்தேனோ - என்கண்மணி
        சொன்னாலும் மனம்ஆறாதடி -
பொன்னுக்கண்மணி.       

50

தமயந்தியைக் கட்டணுண்ணு
        சனிபகவான் பட்டபாடு
    நானுந்தான் பட்டேனம்மா - ஆனால்கண்மணி
        நல்லநேரம் வந்துச்சம்மா - பொன்னுக்கண்மணி.
      

51

கட்டணுண்ணா எத்தனையோ
        காவாலியைக் கட்டலாம்நீ
    கட்டுத் தாலி நான்நடத்தக் - கண்ணுத்தங்கமே
        காவாலி நம்மளை நெருங்குவானா -
                        கட்டித்தங்கமே.

52

கல்யாண விமரிசை

ஊருலகம் போலேநாம்
        ஒழுங்கான தாலிகட்டி
    உறமுறையார் கூடநாம் - கண்ணுத்தங்கமே
        ஊர்கோலம் போய்வரணும் - கட்டித்தங்கமே.
          

53