பக்கம் எண் :

எத

ஆண் பெண் தர்க்கம்

91

எத்தனையோ இடைப்பொண்ணுங்க
        என்னைப் பார்த்து மயங்கினாங்க
    பத்தினியே நீமாத்திரம் - ஏடிதங்கம்மா
        பாறைக் கொப்பா இருக்கிறையே -
                        அடிபொன்னம்மா.

43

இடைப்பெண்ணையும் என்னையும்ஒண்ணு
        எடைபோட்ட மடப்பயலே
    துடைப்பக்கட்டை அடிவேணுமா - ஏலேதங்கையா
        தொடராதேடா தொட்டியப்பிசாசே -
                         அடேபொன்னையா.

44

சமாதானப் பேச்சு

அடிச்சாலும் மிதிச்சாலும்
        ஆறுகூறு போட்டாலும்
    ஆதரிக்க வேணுமடி - ஏடிதங்கம்மா
        ஆரு மில்லாப் பாவி நாண்டி -
                           அடிபொன்னம்மா.
   

45

தாயே தர்மபுத்திரி
        தயவாய்என்னை மன்னியடி
    வாயாலே பேசினதை - ஏடிதங்கம்மா
        வகைவைக்காமல் மன்னியடி -
                            அடிபொன்னம்மா.

46

தண்ணியும் மூணுபிழை
        தயவாப் பொறுக்குதப்பா
    உன்னையும் நான்பொறுத்தேன் - அப்பாதங்கையா
        ஒண்ணுக்கும் அஞ்சாதேநீ - நல்லபொன்னையா.       

47