|
புள
புளியமரப் பொந்துக்
குள்ளே
புடிச்சமுக்கி உன்உடம்பை
அடிஅடிண்ணு அடிப்பாங்கடா -
ஏலேதங்கையா
அநியாயமாச் சாகாதேடா
-
அடேபொன்னையா.
37
ஆகாத காரியத்தை
அடிக்கடிநீ பேசாதேடி
சாகாத வரம்பெத்தேண்டி -
ஏடிதங்கம்மா
சண்டித்தனம் பண்ணாதேடி
- அடிபொன்னம்மா.
38
பத்துத்தலை ராவணனும்
எப்படியோ மாண்டானடா
எம்புட்டடா நீமடையா -
ஏலேதங்கையா
வம்புத்தனம் பண்ணாதேடா
- அடேபொன்னையா.
39
சீதையைச் சிறைஎடுத்த
செம்பொன்னுக் கிரீடத்தானும்
போனவழி தெரியலைடா -
ஏலேதங்கையா
போக்கிரித்தனம்
பண்ணாதேடா -
அடேபொன்னையா.
40
என்பாணம் ராம பாணம்
ஏழுலகம் நடுங்கும் பாணம்
பேமானிப் பயலைஎல்லாம்
- ஏடிதங்கம்மா
பேரைக்
கொடுக்கும்பாணம் - அடிபொன்னம்மா.
41
அல்லிஅர சாணிகிட்டே
அர்ச்சுனன் செக்குச்செல்லலே
அப்படிஎன் பாணத்துக்குமுன்
- ஏலேதங்கையா
எப்படிஉன் பாணம்நிற்கும்
- அடேபொன்னையா.
42
|