|
New Page 1
மும்மூர்த்தி வந்தால்கூட
முடிச்சிடுவேன் நொடிப்பொழுதில்
கம்மால்பண்ண முடியாதடி -
ஏடிதங்கம்மா
நம்மபலம் தெரியாதடி
- அடிபொன்னம்மா.
31
அந்தக்காலத்தி லேஇருந்த
அர்ச்சுணன் வீமன்
காமனும்
எந்தமூலை யடிஎனக்கு -
ஏடிதங்கம்மா
சந்து சந்தாக்
கிழிச்சிடுவேன்
அடிபொன்னம்மா.
32
அளவுக்கு மிஞ்சினாக்க
அமுதமும் நஞ்சு டாப்பா
அளவுக்கு மிஞ்சா தேடா -
ஏலேதங்கையா
அலசடி பட்டுப் போவே
- அடேபொன்னையா.
33
உனக்கி ருக்கும் ரோசந்தான்
எனக்கும் இருக்கு முண்ணுநினை
உனக்குமேல் இருப்பேனடா -
ஏலேதங்கையா
மனப்பால் குடிக்காதேடா
- அடேபொன்னையா.
34
ஒத்தையிலே இருக்கிறேண்ணு
ஒருகாலும் நினைக்காதேடா
கத்திக்கிரை யாகாதேடா
- ஏலேதங்கையா
அத்தைமக்கள்
வாறாங்கடா -
அடேபொன்னையா.
35
அத்தைமக்கள் வந்தால்
என்ன
கத்தியெல்லாம் வந்தால்
என்ன
கத்தி ரிக்காய் போல்அவரை
- ஏடிதங்கம்மா
சுத்தமா அரிஞ்சிடுவேன்
- அடிபொன்னம்மா.
36
|