பக்கம் எண் :

உங

88

மலையருவி

உங்கள் வீட்டு முருங்கைக் கீரை
        எங்கள் வீட்டுக் கிள்ளுக் கீரை
    தங்கம்நீ தயங்குறேடி - ஏடிதங்கம்மா
        பங்கம் செய்யப் பார்க்கி றேடி -
                        அடிபொன்னம்மா.
     

25

உன்னைப் போல முரட னெல்லாம்
        ஓடிஓடி ஒளிகையிலே
    எந்த மூலை யடாநீமூடா - ஏலேதங்கையா
        சொந்தப் பேச்சாப் பேசாதேடா -
                        அடேபொன்னையா.

26

என்கூடப் பிறந்த வங்க
        ஏழாணு ரெண்டு பொண்ணு
    பத்துப் பேரிலே நான்தாண்டி - ஏடிதங்கம்மா
        பயில்வா னுக்குப் பிறந்த குட்டி -
                         அடிபொன்னம்மா.

27

எங்கள் அக்கா தங்கச்சிகூட
        எப்போதாவ தொருத்தன்
    சக்காந்தம் பேசினாக்க - ஏலேதங்கையா
        சண்டைவரு மாவராதா - அடேபொன்னையா.        
  

28

இரும்புத் தலையன்கூட
        என்தங்கச்சி அக்காள் கிட்ட
    இடும்பு பேச நான்கேட்டால் - ஏடிதங்கம்மா
        இடுப்பை ஒடிச்சிடுவேன் -
                          அடிபொன்னம்மா.
      

29

மூணு கொம்பு முளைச்சவனும்
        சாணுபத்து வளந்தவனும்
    சாமானியமா எங்கிட்டே - ஏடிதங்கம்மா
        சமர்த்துப் பண்ண முடியாதடி -
                        அடிபொன்னம்மா.

30
___________________________________________________

    28. சக்காந்தம் - பரிகாசம்.