பக்கம் எண் :

மல

ஆண் பெண் தர்க்கம்

87

மல்லுக்கட்டிலே அவுங்க என்னை
        மடக்கமுடி யாது பொண்ணே
    பில்லுக் கட்டைப் போல்அவரை - ஏடிதங்கம்மா
        பிரியைக் கட்டி இழுத்திடுவேன் -
                            அடிபொன்னம்மா.
    

19

பில்லுக்கட்டைப் போல்அவரைப்
        பிரியைக்கட்டி இழுத்தி யிண்ணா
    வீச்சரிவாள் உன்தலையை - ஏலேதங்கையா
        வீசி டுண்டா வேகத்திலே -
அடேபொன்னையா.       

20

ஆணாப் பிறந்திருந்தால்
        வீணாப்போ காதென்பலம்
    காணாமற் போவாங்கடி - ஏடிதங்கம்மா உன்
        கண்ணுக்கு முன்னா லேயே -
                              ஏடிபொன்னம்மா.
      

21

துள்ளுகிற மாடெப் போதும்
        துள்ளித் துள்ளிப் பொதிசுமக்கும்
    துள்ளாத டாமடையா - ஏலேதங்கையா
        பொல்லாத வங்க அவுங்க -
                            அடேபொன்னையா
       

22

வெட்டி உருட் டுருட்டி
        விருதாவாப் பேசலைடி
    வேலைக்காரன் நானடி - ஏடிதங்கம்மா
        வெளியே வந்தால் தெரியுமடி -
                            ஏடிபொன்னம்மா.
     

23

முன்ஒரு காலத்திலே
        முனியாண்டி மகன்ஒருத்தன்
    என்னமோ சொன்னத்துக்கு - ஏலேதங்கையா

        எமலோகம் சேர்ந்தானடா - அடேபொன்னையா.
                   

24