பக்கம் எண் :

ந

86

மலையருவி

நான்பார்த்த எருமைக்கடா
        உன்ஜாடை இருந்திச்சடா
    கஞ்சாக் குடிச்ச கடா - ஏலேதங்கையா
        நெஞ்சுஅஞ் சாதகடா - அடேபொன்னையா
       

13

கன்னங் கறேலெண்ணுதான்
        கருங்கடாப் பார்த்தேன் ஒண்ணு
    சின்னக்கடை வீதியிலே - ஏலேதங்கையா
        சீப்பும் காப்பும் வாங்கையிலே -
                            அடேபொன்னையா.
      

14

உன்னைநான் ஒசத்திப் பேச
        என்னைநீ இறக்கிப் பேச
    உலகம் பொறுக்குமோடி - ஏடிதங்கமே
        ஒத்து வாழணுமேடி - அடிபொன்னம்மா. 
      

15

மரத்தடியி லேநிற்கிற
        மாமன் இதைக் கேட்டாருண்ணா
    மானங்கெட்டுப் போகுமடா - ஏலேதங்கையா
        மரியாதையாப்போயிரடா -
                            அடேபொன்னையா.

16

முன்னேநான் சொன்னேனடி
        இன்னம் என்ன பயம்டி
    பின்வாங்கவே மாட்டேனடி - ஏடிதங்கம்மா
        என்னவந் தாலுஞ்சரி - அடிபொன்னம்மா.   
    

17

மாமன்மாத் திரமில்லை
        மாமியாருங் கூடஇருக்காள்
    மச்சான்மாரு ரெண்டுபேரு - ஏலேதங்கையா
        மல்லுக்கட்டிலே கெட்டிக் காரரு -
                            அடேபொன்னையா.

18