பக்கம் எண் :

ம

ஆண் பெண் தர்க்கம்

85

மாமரத்துக் கடியிலேதான்
        மாமன் நிண்ணு பார்க்கிறாரு
    ஏமன்கையில் வேல்பாருடா - ஏலேதங்கையா
        ஏமன்ஊருக் கென்னை அனுப்பிடுவார் -
                            அடே பொன்னையா.
  

6

சாமைக்கதிர் அறுக்கணும்டா
        சாதிகெட்ட சக்கிலியா
    ஏமன் கையில் அகப்படாதே - ஏலேதங்கையா
        என்மேல் ஒண்ணும் குத்தம் இல்லை -
                            அடேபொன்னையா.
   

7

சாமையைநீ அறுத்தால் என்ன
        பூமியைப் பொளந்தால் என்ன
    மாமன் என்ன செய்வானடி - ஏடிதங்கம்மோ
        மண்ணைக் கவ்வ வைப்பேனடி -
                            அடேபொன்னம்மா.
     

8

போடா பொடிக்கொசுகு
        பொழுதோடே சேருவீடு
    சாமைக்காட்டுக் கெருவாகாதே - ஏலேதங்கையா
        சமராசியாப் போகலாம்டா - அடேபொன்னையா.       

9

பெரட்டாசி மாசத்திலே
        பெரியகடை வீதியிலே
    பேரீச்சம் பழந்தானடி - ஏடிதங்கம்மா
        பெரியபடி ரெண்டுவாங்கினேன் -
                                அடிபொன்னம்மா.

10

கத்திரிக்காய் மாங்காயும்
        கனிஞ்ச பழங்களும் நான்
    கண்டேனடி அங்கேநான் - ஏடிதங்கம்மா
        காசிருந்தும் வாங்கவில்லை - அடிபொன்னம்மா.    

11

பெரியகடை வீதியிலே
        பேரீச்சை வாங்கையிலே
    பொறுமைஒண்ணும் இல்லாத - ஏலே தங்கையா
        எருமைக்கடா பார்த்தேன் நான் -

                                அடேபொன்னையா.

12