பக்கம் எண் :

அப

84

மலையருவி

அப்படிச் சொல்லாதேம்மா
        என் கண்ணே ஆசைக் கிளியே
    அநியாயமா நான் உன்னை
        அவதூறு பேசினாலும்.
         

23

அன்பாக நீ அழைத்து
        ஆதரிக் கிறையே கண்ணே
    பொன்மணியே என் பாவத்தைப்
        பொறுத்த தயவுக்காக.
        

24

சண்டைப் பேச்சு

ஆலமர ரோட்டுவழி
        அலைந்தலைந்து போறபெண்ணே
    சாலைவழி ஏண்டிபோறே - ஏடிதங்கமே
        சருக்காரு ரோட்டுவழி - அடிபொன்னம்மா.
       

1

சாமைக் கதிரறுக்க நான்
        சருக்காரு ரோட்டுவழி
    மாமன் கூடப் போறேனடா - ஏலேதங்கையா
        மலையடி வாரத்துக்கு - அடேபொன்னையா.  
        

2

சாமைக் கதிரறுக்கநீ
        சாமத்திலே ஏண்டிபோறே
    சாலைவழி பேயிருக்கும் - ஏடிதங்கமே
        சந்தடி அடங்கிப் போச்சே - அடிபொன்னம்மா.  
 

3

சாலைவழி போகையிலே
        மாமன்கூட என்ன சோலி
    நான்வந்தால் போதாதோடி - ஏடிதங்கமே
        சாமத்திலே சரிசோடியா - அடிபொன்னம்மா.        

4

சாமைக் கதிர்அறுக்க - யாரும்
        சாமத்திலே போவாங்களா
    சரசம்நீ பண்ணாதேடா - ஏலேதங்கையா

        சனியன் பிடித்த பையா - அடேபொன்னையா.

5