பக்கம் எண் :

ர

ஆண் பெண் தர்க்கம்

83

ராசாவும் மந்திரியும்
        ராவெல்லாம் திரிந்தாலும்
    ராணி யான உன்கிட்ட
        நாடுவாங்க ளோநாடு.
                

16

இப்படி எல்லாம் இருக்க
        இந்த மூடனான நான்
    எப்படிஉன் மனசைநான்
        கலக்கினேன் கலக்கினேன் கலக்கினேன்?        

17

உன்னைப் பார்த்த நாள்முதலா
        ஒருநாளும் சாப்பிடலை
    உன்முகம் என்மனசில்
        பதிஞ்சுச்சே பதிஞ்சுச்சே பதிஞ்சுச்சே.   
         

18

சும்மாநான் வெட்டிப் பேச்சும்
        வெறும்பேச்சும் பேசினேனே
    அம்மாஉன் பாதம்கதி
        அம்மணி அம்மணி அம்மணி
             

19

மனசுக்கிசைந்த பசுந்தேனே
        மாமா கோமானே
    கண்ணிய மாநம்ம
        ரெண்டு பேரும் இருப்போம்.
              

20

கம்பீரமா இருக்கலாம்
        காமா சோமா மாமா
    உன்னைவிட வேறேகதி
        உலகத்திலே இல்லை மாமா.
                  

21

என்னைப் போலே உங்க ளுக்கு
        எத்தனையோ பேர் இருப்பார்
    உண்மையாநான் சொல்லுறதை

        ஊக்கமாய்க் கேளுங்கள் மாமா.       
               

22