பக்கம் எண் :

New Page 1

82

மலையருவி

    வேறொரு பெண்ணைப் போலே
        வெறிபிடித் தலையாமலே
    பேரைக்காப் பாற்றினையே
        பொன்னே பொன்னே பொன்னே.
                

9

சங்கதி அறியாமே
        சண்டாள னானநான்
    சண்டித்தனம் பண்ணி னேனே
        பெண்ணே பெண்ணே பெண்ணே.
         

10

தாசி யிண்ணும் வேசி யிண்ணும்
        தப்பாநான் சொன்ன சொல்லைத்
    தயவாநீ மன்னிக்கணும்
        தாயே தாயே தாயே.
           

11

உன்குணத்துக் காகஎன்
        உயிரையே தத்தஞ் செய்வேன்
    மாங்கனியே என்சொத்தும் - நானும்
        உனக்கே உனக்கே உனக்கே.
         

12

அப்பன் அண்ணன் மார்களும்
        அம்மா அக்கா மார்களும்
    துப்பாமே துப்பினாங்க என்
        முகத்திலே முகத்திலே முகத்திலே.

13

நான்தான் பெரிய மனுச னுண்ணு
        நினைச்சேன் நான்
    நான்தான் பணக் காரனுண்ணு
        நினைச்சேன் கண்மணி கண்மணி.
  

14

உன்பணத்தில் ஒருபங்கும்
        என்கிட்டே இல்லையே
    ஏமாந்து போனே
கண்மணி
        கண்மணி கண்மணி.

15