பக்கம் எண் :

New Page 3

ஆண் பெண் தர்க்கம்

81

மோடிபண் ணாமே நீங்கஇருந்தா - இனிமேலாவது
        வீடுவாசலும் சொத்துச்சுகமும் உனக்குச் சொந்தம்
    காடு கரையும் ஆடு மாடும்
        உனக்கே சொந்தம்
                   

2

முன்னே நான் சொன்ன மாதிரி
        இன்னும் நூறு தரஞ் சொல்லுறேன்
    என்னை அடிமை யாநினைங்க
        இனிமே லாவது.
       

3

உங்களை நினைச்சு நினைச்சு
        உருகுச்சே என் மனசு
    சொந்த வீடு போல நீங்க
        நினைச்சுஇருந் தால்சொகுசு.
                

4

ஓயாமல் தவம்செய்து
        உருக்கமாய் பெற்றெடுத்த
    தாயையும் தகப்பனையும்
        மறந்தேன் உங்களாலே.
            

5

ஒப்பில் லாத என்னதெல்லாம்
        உங்களுக்கு ஒப்படைத்தேன்
    தப்பாமலே நான் என்னைத்   
        தத்தஞ் செய்தேன் தங்களுக்கு.  
               

6

ஆகாஎன் கண்மணியே
        அன்புள்ள கண்மணியே
    ஓகோ நான் பாவியானேன்
        மன்னி மன்னி மன்னி.
           

7

உன்குணம் தெரியாமே
        ஊளை யிட்டேன் நாயைப் போலே
    என் குணம் கெட்ட துண்ணு
        உணர்ந்தேன் உணர்ந்தேன் இப்போ.         
  

8