பக்கம் எண் :

ச

80

மலையருவி

சிங்காரப் பெண்கள் இருக்கும்
        தெருவீதி அதுதானையா
    தேடுகிற காரணம் என்ன - ஐயா
        தேடும் ஆள்பேர் என்னஐயா?
               

21

ஆளுபேரு தெரியா தையா
        ஆளைப் பார்த்தால் தெரியும் ஐயா
    ஏழடுக்கு மெத்தைக் காரி - ஐயா
        எனக்கம் புட்டுத் தான்தெரியும்.

22

அந்த மாதிரிப் பெண்ணு
        அந்தா நிற்கிறாள் பாருங்க
    ஆகாச மாயிருக்கும் - ஐயா
        அழகான ஏழாம் மெத்தையிலே.

23

ஐயா தாணாக் காரரே
        அதுதான் நான் சொன்ன வீடு
    மெய்யாநான் உங்களுக்கு - ஐயா
        மேலான வந்தனம் சொல்றேன். 
                

24

மாமா தயவு செஞ்சு
        மகள்மெத்தைக் கேறிப் போயி
    சேமமாக் கேட்டு வாங்க - மாமா
        சேதிவந் தெனக்குச் சொல்லுங்க.
              

25

அப்பா மருமகனே
        அன்பான மன்மதனே
    எப்பண்ணு காத்திருந்தாள் - என்மகள்
        இப்பவே உன்னை வரச்சொன்னாள்.

26

கூடுதல்

மோடி பண்ணின அருமை மாமா - என்னைத்
        தேடிவந்த காரணம் என்ன - மாமா
    கோடிநமஸ் காரம் என்
        கும்பிடு உனக்குச் சொந்தம்.
              

1