பக்கம் எண் :

ச

ஆண் பெண் தர்க்கம்

79

சமைந்த செவ்வாய்க் கிழமெருந்து
        உங்கள் மேலே நினைவு
    சாமிநீங்க என்மேல் இப்போ
        கண்ட தென்ன குறைவு?
                

14

வீடும் வாணாம் வாசலும் வாணாம்
        சொத்துச் சுகமும் வாணாம்
    ஏடும் வாணாம் எழுத்து வாணாம்
        நானே எனக்கு வாணாம்.
            

15

நாதன் என்னைத் தேடி வந்தால்
        நானே அவருக் கடிமை
    நான்மாத் திரம் இல்லை
        உனக்குள்ள தெல்லாம் அடிமை.        
        

16

தேடுதல்

திருச்சிராப் பள்ளியிண் ணாளே
        தேரோடுற வீதியிண் ணாளே
    தேடிவந்த பறப்பெண் ணாளை - மயிலே
        தெருவீதி தெரிய லையே.
       

17

குருமந்திரம் போலே அவள்
        குரல் காதிலே விழுகுதே
    உருகி அழுதை யேடி - மயிலே
        உன்னைநான் மறப்பே னோடி.

18

மானே மரகதமே
        மயிலே இளங்குயிலே
    தேனே உன்னைத் தேடி நானே -
        தெருவில் அலைகி றேனே.

19

உள்ள தைச்சொன் னாளோ
        இல்லாத தைச்சொன் னாளோ
    ஒண்ணுந் தெரியலையே மயிலே

        ஒளிந்தையோ என்னை மறந்து?
                                  

20