பக்கம் எண் :

New Page 1

98

மலையருவி

கொழுந்தி மார்களைப்பற்றியும்
        கோழிக்கால் களைப்பற்றியும்
    கோளாறு சொல்லித்தாரேன் - கண்ணத்தானே
        கொஞ்சம்நிண்ணு கேட்டுப்போங்கோ -
                           பொன்அத்தானே.

84

சாக்கடை யைக்கிளறும்
        காதிக்கோழி ரெண்டடித்துச்
    சாப்பிடுற நேரத்திலே - கண்ணேஉங்களுக்குச்
        சாதிக்கோழிக் கால்வருமே -
பொன்அத்தானே.        

85

வாறதைப் பார்க்கையிலே
        வருத்தப் படாமல்நீங்க
    கறுத்தகோழி காலைத்தான் - கண்ணத்தானே
        காண்பிக்கணும் கொழுந்திமாருக்குப் -
                            பொன்அத்தானே.

86

காண்பிக்க மறந்திங்கண்ணா
        சாமமிண்ணா லும்அவுங்க
    சாணியெல் லாங்கரைச்சுக் - கண்ணத்தானே
        சட்டையெல்லாம் ஊத்துவாங்க - பொன்னத்தானே.  
  

87

வேண்டியவை

கண்ணேஎன் கண்மணியே
        என்னவே ணும்உனக்குக்
    கண்ணாலே கண்டதெல்லாம் - என்கண்மணி
        காண்பித்தால்நான் வாங்கித்தாரேன் -
                            கண்ணுப்பொன்மணி.
     

88

ஒட்டியாணம் வேணுமா
        பட்டுத்துணி வேணுமா
    எட்டுக்கல் கம்மல்வேணுமா - என்கண்மணி
        சட்டுண்ணுநீ சொல்லித்தீரம்மா -
                            கண்ணுப்பொன்மணி.
     

89