|
ரத
ரத்னக்கல் நகையும்
முத்துப் பதக்கங்களும்
சத்திக்குத் தகுந்தாப்போலே
- கண்ணத்தானே
பத்திரமாத் தான்வாங்கணும்
-
பொன்னத்தானே.
90
மெத்தைவீடு ஒண்ணுவேணும்
மேலான படுக்கைவேணும்
சுத்தமா நாம்இருக்கக் -
கண்ணத்தானே
சொகுசான உடுப்பும்வேணும்
-
பொன்னத்தானே.
91
வீட்டுவேலை யைப்பார்க்க
வேலைக்காரி ஒருத்திவேணும்
வெளிவேலை யும்பார்க்கக்
- கண்ணத்தானே
வேலைக்காரன் வேறேவேணும்
-
பொன்னத்தானே.
92
நாலாறு மாசத்திலே
நம்மவீட்டுக்
காளுவரும்
கோலாரு போகணுமே - கண்ணத்தானே
குழந்தையும் பெத்தெடுக்கப்
-
பொன்னத்தானே.
93
மாமன் அழைத்தல்
ஆற்றோரத்து வீட்டுக்காரி
- தங்கம்தையலாளே
ஆனைமலை வாறியாடி -
தங்கம்தையலாளே
நாற்றுநடப் போறவளே -
தங்கம்தையலாளே
நாகமலை வாறியாடி -
பொன்னுகுயிலாளே.
1
எட்டுவச்சுப் போறவளே -
தங்கம்தையலாளே
ஏர்க்காடு வாறியாடி
- பொன்னுகுயிலாளே
பட்டுப் புடைவைக்காரி -
தங்கம்தையலாளே
பட்டுமலை வாறியாடி - பொன்னுகுயிலாளே.
2
|