|
| மன்னன் சொல் விருத்தம் |
| “வடகரை நாடு காவல் |
| வல்லசேப் பிளையான் கேளாய் ! |
| துடியிடை மாது புத்தூர் |
| சோமாசி பட்டர் பெற்ற |
| மடமயில் மாது தன்னையுன் |
| மகன்சிறை யெடுத்தொளித்ததாக |
| வடமொழி மறையோ ரெல்லாம் |
| வகையெனக் குரைசெய் தாரே” |
| |
| வசனம் : ஆகோ கேளும் அரசுகாவல் சேப்பிளையானே, குணசீல மங்கலம் புத்தூர் சோமாசி பட்டர் மகளாகிய ஆரிய மாலையை உன்மகன் காத்தவராயனானவன் சிறையெடுத்துப் போனதாக வடகரை பிறாமணாள் ஆதியந்தமும் நம்மிடம் முறையிட்டார்கள். அப்படி நம் காலத்தில் செய்யலாமோ? சேப்பிளையான் ! |
| சேப்பிளையான் சொல்விருத்தம் |
| அருமறை புகழ வாழும் |
| ஆரியப் பேந்திர மன்னா ! |
| மருமலர்ப் புத்தூர் தன்னில் |
| மாலையை எனது மைந்தன் |
| சிறையெடுத் தொளித்த தாகத் |
| தேவரீர் சொல்லக் கேட்டேன் |
| கருவுடன் எங்கும் தேடிக் |
| கட்டியே தருகு வேனே” |
| |
| வசனம் : ஆகோ கேளுங்கள் அய்யா சாமி ஆரிய மாலையை என்மகன் சிறையெடுத்து ஒளித்ததை யானறியேன். அப்படி உண்டானால் சமூகத்தில் கட்டித் தருகுவேன் அய்யா சாமி. |
| நடை |
| நாட்டுப்பாடல் |
| சேப்பிளையான் கூற்று |
| ஆரியப்பூ ராசாவே ஆண்டவனே கும்பிடுறேன் ! |
| காரியமாய் கேட்டருளும் என் கர்த்தாவே சொல்லுகிறேன் |
| |
| என்னுடைய காவலென்றால் எமனும் வந்தண்டானே |
| உன்னுடைய தேசமதில் உத்தமனே ஆரியப்பா. |