|
மதித்த சந்திராதி யுதித்தவளர் கல்லுங் காவேரி |
உதித்த புல்லும் பூமிகளும் உள்ள நாள் எத்தனையோ |
|
அத்தனை நாளைக்கும் அரசுகாவலும் கொடுத்தீர் |
பெத்தாய் செய்திடினும் பிழைதாளாப் புண்ணியனே |
|
புண்ணியா திரிசிரபுரத் ததிபதியே பேராளா |
என்னும் சுகத்தில் இருக்குமெங்கள் ஆண்டவனே |
|
ஆண்டவனே பூலோகம் ஆரியப்பூ ராசேந்திரா |
வேண்டும் பணிவிடை செய்ய விண்ணப்பம் தெண்டமய்யா |
|
நந்திதிரு வோங்கி நாதர்மலைக்கும் கிழக்கு |
பந்துசனம் ஆலம் பாக்கத்திற்கும் நேர்மேற்கு |
|
இதைச் சேர்ந்த கிராமமெல்லாம் என்னுடைய காவலய்யா |
மதுரைக்கும் கிழக்கு வல்லம் தஞ்சா வூர்க்குமேற்கு |
|
மொழிக்கு மொழிதவறாத முத்திளையான் காவலய்யா |
சொன்ன மொழி தவறாதன் தோகைமலைக்கும் கிழக்கு |
|
பொன்விளைந்தாம் பட்டிவரைக்கும் பொன்னிளையான் காவலய்யா |
முத்திளையான் பொன்னிலையான் முடிபெருத்த சேப்பிளையான் |
சேப்பிளையான் சொல் விருத்தம் |
செந்திரு வல்லி மார்பா |
திருசிர கிரிநா டாளும் |
சுந்தர மதன ரூபா |
சோம சேகரனே போற்றி |
அந்தணர்க் கருளும் செம்பொன் |
ஆரியப் பேந்திர மன்னா |
எந்தனை அழைத்த சேதி |
இன்னதென் றியம்பு வாயே. |
|
வசனம் : ராசாதிராசா ராசபரமேஸ்வரா ராசமார்த் தாண்டா! நல்லார்க்கு மித்ரு! பொல்லார்க்குச் சத்ரு ! வித்தையில் சரஸ்வதி ! புத்தியில் பிரகஸ்பதி! அதிபதியாய் திருசிரபுரம் ஆளப் பட்ட ஆரியப்பூ ராசேந்திரா! பறாக்கு. எச்சரிக்கை. அடியேனை அழைப்பித்த காரியம் அருளிச்செய்ய வேணும் சுவாமி3 |