|
| கோதிலா மாமறையோர் கொம்பனையாள் மாலையரை |
| நிறையதாய் வளர்த்தருளும் நின்மகன் காத்தவனே |
| |
| சிறையே எடுத்தவனும் தேசம்விட்டுப் போனானே |
| தேசம் விட்டுப்போனாலே தேடவே வேண்டாம்போ |
| |
| நம்முடைய ராச்சியத்தில் நலமாக வீற்றிருந்தால் |
| செம்மையல்ல நம்முடைய செங்கோலுக்கே அதுவும் |
| |
| இத்தேசம் தனிலே இருப்பானே யாமாகில் |
| சுற்றி வளைத்துச் சூரன் தனைப்பிடித்து |
| |
| வெற்றியுடன் கொண்டுவந்தல் வேணு மரியாதையுண்டு |
| இஷ்டமுடன் தந்திடுவோம். இடராக நீயிருந்தால் |
| |
| சட்டமுடன் உன்னையுநான் சரியாய்க் கழுவதனில் |
| திட்டமுடன் ஏற்றிவைப்பேன் சேப்பிளையே நீர்கேளும் |
| சேப்பிளை விருத்தம் |
| நாட்டிலே மூவர் நாங்கள் |
| நலமுடன் ஆலம் பாக்கில் |
| போட்டியாய் எதிர்த்த பேரை |
| பொருதுடன் விருது வாங்கி |
| |
| மேட்டியே எனவ றிந்தீர் |
| மெச்சியே காவல் தந்தீர் |
| தெட்டற் களவுக் கெல்லாம் |
| தெரிந்துயான் தருகு வேனே. |
| நடை |
| ஆரியப்பூ ராசனையும் அடிபணிந்து சேப்பிளையான் |
| காரியமாகவே தான் காத்த பரிமணத்தை |
| |
| தேடிப் பிடிப்பதற்கு சேனைபடை கூட்டி |
| நாடி ஒருவாரம் நாளையிலே நானடியேன் |
| |
| திக்குத் திசைதோறும் தேடியே யானடியேன் |
| பக்கமுள்ள நாடு பட்டிணங்களைப் பார்த்து |
| |
| ஸ்ரீராமர் தேவியர்க்காய் தென்னிலங்கை தூது சென்ற |
| மாறாபி றாமியர்க்கு வாகனமாய் நின்றருளும் |
| |
| அஞ்சனா தேவிமைந்தன் அடிபிடித்துப் போனாற்போல் |
| இச்சையுடன் பெண்ணவளை எடுத்தோடிப் போனவனை |