|
ஊரிலே யாரேனும் ஓடியே தேடிவந்தால் |
நானழைத்துப் போறேனென்று நலமாகச் சொல்லுமென்று |
|
மங்கையரை யானும் மணமுடித்தேன் கண்டீரே |
பட்டமது ; கட்டிவைத்து பார்தனிலே நீர்வந்து |
|
திட்டமது செய்தீர்காண் செப்புகிறேன் இப்போது |
சருவியே ஒருவர்தனைச் சலுகையால் சொல்ல வேண்டாம் |
|
அரிவையே என்மேலாசை ஆகவே கொண்டுவந்தால் |
மருவவே பயப்படாதே மனமதுப் பொருத்தங் கண்டாய் |
|
திறமுடன் பாதிகாவல் காத்திடாய் எனப்பகுந்தீர் |
ஆசையாய் தொடர்ந்தபெண்ணை அருஞ்சிறை வைத்தேனல்லால் |
|
நேசமாய் நடக்கைதப்பி நீணிலம் தன்னிலிப்போ |
மோசமே செய்துன்றன் முறையது தப்பேனய்யா |
|
தேசமே பாதிகாவல் சேப்பிளையின் மகன்நானே |
குற்றங்கள் ஏதுமுண்டோ கொற்றவனே நீர்பாரும் |
|
தேச மறிந்திடவே செய்குற்றம் நீ பொறுத்து |
நடந்த வரலாறு நானுரைத்தேன் மன்னவனே |
|
கடநத் மொழியுரைப்பேன் கட்டுரைக்கக் கேட்டருள்வாய் |
காத்தவனார் சொன்னதைக் கண்டுமிக ராசாவும் |
|
பாத்துப் பரிமளத்தை பரிமளத்தின் தன்னழகை |
திங்கள் உதித்தாற்போல் சிவன்கலையும் ஏதுனக்கு |
|
பொங்கமுடன் உருத்ராட்சம் பூண்டதொரு வாறேது |
அரிவாள் மடக்கை அணிந்ததொருகிண்ணாரம் |
|
மருவிலாப் பொன்னுருமாள் மார்நிறைந்த பூணூல் |
மகிழம்பூ மாலை வந்த வழிதனையே |
|
புகலவே நீரும் இந்த வகைதனையே |
சொந்தமுடன் நீரும் தெரிய உரையுமென்றார். |