|
மலையதிர்ந்து சாய்ந்தாலும் |
மனங்கலங்கா காத்தவனே |
மகிழக் கேளும் |
|
சிலையதிர மல்லர்களைச் |
சிரம்துணித்த சேவகனே |
சப்புவோம் யாம் |
|
நிலைகலங்கி மதிமயங்கி |
சேப்பிளையான் பிள்ளையெனச் |
சுற்றினாய் நீ |
|
உலகமதில் உவப்புடனே |
நீபிறந்த வரலாறுதனை |
உணரச் செய்வாயே |
|
|
ராசன் உரைத்தருள நல்ல பரிமணமும் |
நேசமுடன் தான்பிறந்த நெடியகதை சொல்லுகிறார் |
|
வெள்ளிமலை வீற்றிருக்கும் விமலன் அருளாலே |
புள்ளி மான் வயிற்றில் பிறந்தேனே பூலோகம் |
|
நந்தவம் காக்க நவின்றாரே ஈஸ்வரனார் |
அந்த மொழிதப்பாமல் ஐவனமும் காத்துவந்தேன் |
|
வந்தார்கள் ஏழுகன்னி மலர்கள் பறிப்பதற்கு |
அந்தமுடன் கன்னியர்கள் அவர்கள் நீராடையிலே |
|
வந்துஒரு கன்னியுட வர்ணத் துகிலெடுத்தேன் |
பந்தமுடன் நேமமதில் பாங்காய் ஒளிந்திருந்தேன் |
|
ஆறாடிக் கன்னியர்கள் அவர்கள் துகிலுடுத்தி |
சீரான கன்னியரில் தேவி ஒருத்தியொட |
|
துகில்தனையே காணாமல் தேடியே பார்ப்பளவில் |
மயில் போல யானடியேன் மரத்தில் இருந்ததனால் |
|
கன்னியர்கள் யாரென்றே கண்டு கேட்பளவில் |
ஒண்டொடி மானீன்ற உத்தமன் நானென்றேன் |
|
ஆறுபேர் தானோடி அரனார்க்கு உரைத்திடவே |
பாருலகில் ஈசனார் பார்ப்பார வம்சத்தில் |
|
அனந்த நாராயணார் அவர்க்குப் புத்திரனாய் |
புனத்திலே தானெறிய புலச்சியெனை யெடுத்து |