பக்கம் எண் :

44காத்தவராயன் கதைப்பாடல்

மூன்று நாள் பறைச்சி முலையுண்டு வீற்றிருப்பாய்
சேப்பிளை மனையாளாம் சங்கப்பிள்ளை வளர்ப்பாளே.
 
சோமாசி வயிற்றில் சுந்தரமாய் பிறப்பாள்
காமரதி தனையே கண்டு சிறையெடுப்பாய்
 
ஆறுபேர் கன்னியர்கள் அன்புயைட மங்கையராய்
சீருடனே வாய்த்திடு வார் சிறந்த கழுவேறி
 
நம்மிடத்தில் வாருமென்று நவின்றாரே அந்நாளில்
 
அன்றிட்ட சாபமதால் அடியேனும் பூலோகம்
பிறந்தவிபரம் சொன்னேன் புண்ணியரே நீர்கேளும்
 
பூதலத்தில் காத்தவனே
   பிறந்ததொரு வகையினையே
   புகன்றாய் நீயும்
 
தாதுபுனல் மாலைதனை
   சிறையெடுத்தாய் ஒருத்தியென
   சரிதான் இப்போ
 
ஆதரவாய் ஆறுகன்னி
   பிறந்தவிடம் எந்தனுக்குப்
   பொறுமை யாக
 
நீதயவாய் உரைத்திடுவாய்
   நிச்சயத்தை யானறிய
   நவிலு வாயே.
 
 
     வசனம் : ஆகோ கேளும் காத்தவராயனே சிவனுடைய சாபத்தினால் ஏழு கன்னியர் பிறந்ததும் சொன்னதும் சரி. அவர்களுக்கும் உனக்கும் உறவானதைச் சொல்லுவாய்.
 
வாருமையா சொல்லுகிறேன் வந்த வகைதனையே
நாறுமலர்க் குழலாள் நலமான மங்கையரும்
 
ஆரியமாலையும் ஐய்யர் வயிற்றிலே யுதித்தாள்
 
வயிரசெட்டி பாளையத்தில் வளமான ஓந்தாயி
மயிரழகி ஆகியதோர் மங்கையராய் தான்பிறந்தாள்
 
களத்தூரில் இருக்கும் கனத்த சலுப்பரிடம்
சலுப்பச்சி என்றுமவள் சவுதாயி தான்பிறந்தாள்