|
ஆட்பாடி தன்னில் ஆன இடைக்குலத்தில் |
வாய்ப்பாகக் கருப்பாயி வந்துமிகத் தான்பிறந்தாள் |
|
காச்சி மதுவெடுக்கும் கனத்ததொரு குலத்தில் |
பாச்சூரில் பூவாயி பாங்காய் பிறந்திருந்தாள் |
|
மாவடி மங்கலத்தில் வாழும் இடைக்குலத்தில் |
ஞானியவள் நல்லதங்காள் நன்றாய் பிறந்திருந்தாள் |
|
பொன்னான பூவுலகில் புத்தூர் கிராமத்தில் |
வண்ணார நல்லியென வந்துமிகப் பிறந்தாள் |
|
கனத்த தவமிகுந்த களத்தூர் மாநகரில் |
அனந்த நாராயணர் அவர்தனக்கு நான்பிறந்தேன் |
|
துங்க சோமாசிக்கு சிறந்த உடன்பிறப்பு |
மங்காயி தன்வயிற்றில் மகிழ்ந்து பிறந்தேனே |
|
ஆறுபேர் பிறந்தவகை சொன்னதனால் |
யாம்கேட்டோம் அவர் தனக்கு |
சீருடனே உந்தனுட தொடர்பு |
நடந்தவகை திறமதாகக் |
|
கூறுமென்று ராசனவர் கேட்டிடவே |
காத்தவனார் குணமதாக |
பாருமையா கன்னியிடம் யானுறவாய் |
நடந்தவகை பகருவேனே. |
|
அரனடி பணிந்தேற்றும் அனந்த நாராயணனார் |
அவர் வயிற்றிலே பிறந்தேன் |
அன்புடைய சோமாசி அய்யர்க்குப் புத்திரியாய் |
ஆரிய மாலைவந்தாள் |
|
|
வரமுடைய ஓந்தாயி செட்டிகுலம் தன்னில் |
வயிரசெட்டி பாளையத்தில் |
வந்தே பிறந்திட அவளையே சிறைகொண்டு |
வைத்தேன் முதலைப்பாரில் |
|
திறமுடைய சலுப்பச்சி யாகவே சவுதாயி |
சென்றங்கு பிறந்திட |
யானவ்விடம் சென்று திறமுடனே களத்தூரில் |
கோழி கொன்றேன் |