|
அறமது விளங்கிடும் ஆட்பாடி தன்னில் |
அழகுகருப் பாயியென்று |
அவளும் பிறந்திடயான் அவ்விடம் சென்றவள் |
தயிர்மோர் குடித்தேன் |
|
நிரையுடன் புத்தூரில் வாழ்கின்ற வண்ணார |
நல்லியன்றே பிறந்தாள் |
நின்றவள் மனைசென்ற பால்வாங்கி மாலைக்கு |
நெறியுடன் கொடுத்துவந்தேன் |
|
சிறையுடன் பாவாணர் புகழ்கின்ற பாச்சூரில் |
திறமுடைய பூவாயியாய் |
சென்றுமவள் பிறந்திட யானவ்விடம் சென்று |
திறமுடன் மதுகுடித்தேன் |
|
உரமுடன் சொல்லுகிறேன் உத்தமனே தூண்டியும் |
உறுத்தவே வாடிநிற்பேன் |
உயிர்க்கழுவில் இருக்குமவ் வேளையில் இடைக்குலம் |
உதித்திடும் நல்லதங்காள் |
|
தாகமுடன் மோர்கொண்டு என்தாகமது தணித்திட |
தையலொருத்தி யாய்வருவாள் |
தானெழுவர் கன்னியுடன் சாபமது பெற்றுயான் |
தாரணியில் வந்தவாரே |
|
|
காத்தவனார் சொன்னதையும் கண்டுமிக ராசாவும் |
ஏத்தமுள காத்தவனை இன்பமுடன கொண்டாடி |
|
காரியக் காரர் கனத்தசபை மந்திரிகள் |
சீரிய சந்தோஷமுடன் சிறப்பு மிகவருளி |
|
அந்தப் பிழைபொறுத்து ஆள்கடுமை கொண்டதுபோல் |
இந்தப் பிழைதனைநாம் இப்போதுதான் பொறுத்தோம் |
|
பருவமுடன் கூடியதோர் பாவையாள் தன்னுடனே |
திருவரங்கம் பேட்டை தலத்தில் எழுந்தருளி |
|
மாலையுடன் நீரும் வையகத்தில் எந்நாளும் |
சாலவே வாழ்ந்திருங்காண் தம்பி பரிமணமே. |