பக்கம் எண் :

காத்தவராயன் கதைப்பாடல்47

ஆலமே உண்ட ஈசன்
   அரனருள் புத்திரா கேளும்
   கோலமாய்க் களவு செய்து
 
கொண்டுபோய் பாரில் வைத்து
   மாலையும் நீருமாக
   வையகத் தன்னில் வாழ்வீர்
 
 
     வசனம் : ஆகோ கேளும் பிள்ளாய் காத்தவராயனே ஆரிய மாலை சேப்பிளையானுடன் திருவரங்கப்பட்டியில் இரும்பிள்ளாய் காத்தவராயனே.
 
அரசன் உரைத்திடவே அய்யமார் சோமாசி
பிரியமுடன் வேதியர்கள் பிரபலமாய்க் கொண்டாடி
 
மங்காயி பெற்றெடுத்த மைந்தனென்று சொன்னீரே
அங்கவளும் பெற்றிடுநாள் அப்போது நாங்களெலாம்
 
வனத்தில் எறிந்ததொரு மன்னவனும் நீர்தானோ
புனத்தில் எறிந்ததொரு புண்ணியனும் நீர்தானோ
 
எங்களுட பெண்ணாலே இறந்திட வேண்டாங்காண்
பொங்கமுடன் நாங்களும் பொன்னான மாலையரை
 
நாங்கள் ஒருமனதாய் நலமான மாலையரை
தாங்கி மணமுடித்துத் தாரோங்காண் காத்தவனே
 
சத்தமாய் மாலையரை தாரைமிக வார்த்து
புத்தியுட நாங்களெல்லாம் பொருந்தி மணமுடித்து
 
சித்தமுடன் செய்து தருகிறோம் என்று சொல்லி
புத்தியுள்ள காத்தவனே என்று புகழ்ந்தார்கள்.
 
சிலைமதவேள் குடைய காத்தவனே
   உந்தனுக்குச் செப்புவோம் யாம்
அலைபுகழும் களத்தூர் அனந்த
   நாராயணார் அவர்தன் தேவி
 
சிலைபொருது மங்காயி செல்வனென
   எங்களுக்குத் தெரிந்த காலே
விலைமதியா மாலையரை உந்தனுக்கே
   மணமுடிப்பேன் விரையுள் ளோனே