பக்கம் எண் :

48காத்தவராயன் கதைப்பாடல்

அய்யமார் சொல்ல அடிபணிந்து காத்தவனார்
மெய்யான வார்த்தை விளம்புகிறேன் கேட்டருள்வீர்
 
பெற்றாளே பிராமணத்தி பேருமிட்டான் சேப்பிளையான்
முத்தாலே ஆபரணம் மோதிரங்கள் கையிலிட்டு
 
வளர்த்தாளே சங்கப்பிள்ளை வந்துதித்த சாபமிது
தழைத்தபுகழ் மன்னவரே சாற்றுகிறேன் கேளுமினி
 
ஆரிட்ட சாபம் அழிந்தாலும் வையகத்தில்
மாதாயிட்ட சாபம் மறக்கேன் கனாவிலையும்
 
அரனார் வயது பதினாறிலே வாருமென்றார்
திறமானதோர் வயது சென்றதுகாண் இன்றோடே
 
பங்குனி மாதம் பதினைந்தாம் தேதியிலே
பொங்கும் பௌர்ணமி பூரணச் சந்திரனில்
 
வெள்ளிக் கிழமை விடியவொரு சாமமதில்
தெள்ளியசொல் மாலையினால் செட்டிப் பெண் ஓந்தாயியால்
 
கரிச்சானும் கத்தி கிழக்கே வெளுக்குமுன்னே
தாழ்ச்சியது இல்லாமல் தானே உயிர்த் தூண்டியிலே
 
இருப்பாய் கழுவிலென்று ஈஸ்பரனார் சாபமிட்டார்
விருப்பமுடன் கழுவில் வீற்றிருக்க வேணுமினி
 
நிற்கவென்றால் எந்தனுக்கு நீதியல்ல ராசாவே
தாமதமும் பண்ணாமல் தானே யனுப்பினியால்
 
உமக்கும் புகழ்கிடைக்கும் உம்மாலே எந்தனுக்கு
சேமம் பெறலாம் இப்போதே அனுப்புமென்றார்.
 
 
நன்னிய மறை யோர்க்கிந்த
   நல்லதாம் வார்த்தை சொல்லி
 
உன்னிய பூரு வத்தை
   உரைத்தேன் யான் எல்லோர்க்கும்
 
மன்னியே சிறை யெடுத்த
   மண்ணினில் இருக்கொ ணாது
 
கன்னிதன் பொருட்டி னாலே
   கழுவினில் ஏறு வேனே.