|
காத்தவனார் சொல்வதையும் கண்டுமிக ராசாவும் |
பார்த்துப் பரிமளத்தை பரிமளத்தின் தன்னழகை |
|
அழகை எழுதினவன் அதிர்ஷ்டம் எழுதாமல் |
இளமைப் பிறாயத்தில் ஏறிக் கழுவிருக்க |
|
ஆயன் எழுத்தை அறியவே போகாது |
மாயன் கபடமதை மறிக்கவே போகாது |
|
வருந்திமிக ராசன் மகராசன் காத்தவர்க்கு |
விருந்துமிகச் செய்துவைத்து வீரமுடி மன்னவனார் |
|
போவென் றனுப்பிடவே பூநூல் மார்பழகன் |
அகிலாண்ட வல்லியுமை அடிபணிந்த பின்னருமே |
|
ஆட்சியுடன் அருள்பெற்று ஆசாரி கொல்லருடன் |
ஆட்சியுடன் கழுவிருக்க அருளோடு வாராரே |
|
காரியக் காரரெல்லாம் கண்டு மனதுருகி |
|
வேதியர் களெல்லாம் வெந்து மனதுருகி |
சோதனையாய் காணுதற்கு சொல்லி மனதுருகி |
|
தன்னை வளர்த்தருளும் தாயாரும் சங்கப்பிள்ளை |
அன்னம் போல்வாய்திறந்து அவளும் புலம்பிடவே |
|
பட்டினத் தோரெல்லாம் பார்த்துப் புலம்பிடவே |
திட்டினவே காத்தவனார் திருசிர புரங்கடந்து |
|
காவேரி தான்கடந்து கஸ்தூரி ரங்கரையும் |
நாவாலே துதித்து நல்லஜெம்பு நாதரையும் |
|
தாயார் அகிலாண்டவளை தான்பணிந்து காத்தவனார் |
காயாம் பூ வண்ணனான கன்னனே வாருமென்று |
|
கொள்ளடத்தைத் தான்கடந்து கூட்டி வடக்காக |
மெள்ளவே பாச்சூர் மேடைவந்து சேர்ந்தார்கள் |
|
பாச்சூர் மேடைதனில் சென்று காத்தான் |
பவ்வியமாய் மற்றந்த தளவாய் தன்னை |
ஆச்சாவும் தேக்கதுவும் இரண்டும் சேர்த்து |
அறுபதடி குறையாமல் அளவாய் இங்கே |
பாச்சாவின் மாசியுட மலையிற் சென்று |
பாங்குடனே கொண்டுவந்து பதிப்பா யாகில் |
தாழ்ச்சியது குறைவில்லா சம்பத் தாக |
தருகுவேன் என்னாளும் தருகு வேனே |