|
| காத்தவனார் சொல்ல கனத்த தளவாயும் |
| இதமுடன் காத்தவனே இன்பமாய் கொண்டாடி |
| |
| கொல்லி மலையேறி கூசாமல் காளிவனம் |
| நல்ல சதுரகிரி நடுவில்நின்ற தேக்குமரம் |
| |
| ஆச்சாவும் தேக்கதுவும் அறுபதடி வெட்டிவந்து |
| வாச்சியால் சீவி வர்ணமது இழைத்து |
| |
| ஐயர் உரைத்தபடி அச்சுவண்டி மேலேற்றி |
| கொண்டுவந்து சேர்த்தார்கள் கொடிய கழுமரத்தை |
| |
| அன்றுதான் காத்தவனார் அம்மரத்தைக் கண்டருளி |
| சந்தோஷம் தானாகி தளவாய் தனைப்பார்த்து |
| |
| தந்தாரே வெண்ணீறு சம்பத்து உண்டாக |
| மாறாத செல்வம் வளரவே தந்தருளி |
| |
| தாராளும் காத்தவனார் தச்சன் தனையழைத்து |
| திருவானைக் காவல்வளர் ஜெம்புலிங்க ஆசாரி |
| |
| மருவிலா சீரங்கம் வாழும்ரெங்கர் ஆசாரி |
| ஆசாரி யார்களேநீர் அன்பாய்க் கழுமரமும் |
| |
| தற்சகுனம் செய்துவைத்தால் சம்பத்து உண்டாக |
| புத்திர செல்வமுடன் பெருஞ்செல்வம் காமாக்ஷி |
| |
| சித்தமுடன் கொடுப்பாள் செய்யுங்கள் வேலையென |
| தெண்டனிட்டு ஆசாரி செய்தார் கழுமரமும் |
| |
| செய்தனன்காண் ஆசாரி சிறந்து தோன்ற |
| ஜெகத்திலுள்ள சித்திர மெல்லாம் |
| மெய்தான்காண் காத்தவனும் கழுவி லேற |
| மேவியதோர் கைப்பல கையுடன் |
| பேய்தானம் விட்டகல மெய்நிலைக்க இரண்டுபேர் |
| பூதலத்தில் உள்ளவர்கள் புகழ்ந்திடச் |
| செய்ததொரு வேலைதனைக் கண்டு காத்தான் |
| திருவாக நல்வாக்குச் செப்புவானே |
| |
| தெய்வ மாவதும் உங்களால் |
| உபதேச மாவதும் உங்களால் |
| வைய மாவதும் உங்களால் |
| மன்ன னாவதும் உங்களால் |