|
| உய்யநா னொளியாக சாலைக்கு |
| உயர்ச்சி யானகண் ணாளரே |
| தையல் காமாக்ஷி தானும் |
| தண்ணருள் செய்கு வாளே |
| |
| வாழிபெற்றக் கொல்லர் மறுபடியும் காத்தவர்க்கு |
| ஆழிதனில் இருக்கும் ஆயனுடை பாம்பணைபோல் |
| |
| விஸ்தாரம் ஆக விளங்குமுயிர்த் தூண்டிபண்ணி |
| கஸ்தூரிப் பொட்டணங்கள் கழுதனிலே தானிட்டார் |
| |
| தூண்டி துடைப்பருமன் தூண்டிமுள் கைப்பருமன் |
| தாண்டுமுயிர்த் தூண்டியிலே தங்கமுத்துப் போயேறி |
| |
| வேண்டியதோர் பூவும் விதமான சிங்காரம் |
| பூண்டிடவே சங்கிலியும் போத சமைந்தருளும் |
| |
| பாச்சூர் மேடை பதிவாய்க் கழுமரமும் |
| காசுமதும் இல்லாமல் தானே படைத்தருளி |
| |
| நட்டு கழுமரமும் நாலுபுறம் பந்தலிட்டு |
| ஒட்டுப் பலகையுடன் உயிர்த் திருகாணியுடன் |
| |
| சாற்றியே பக்கமதில் தான்சமைந்தான் ஆசாரி |
| போற்றியே காத்தவனை புகழ்ந்து தளவாயும் |
| |
| சமைந்த கழுவதனில் தானேற வாருமென்று |
| அமைந்த தொரு ஆசிரியம் அன்பாகப் பாடுகிறான் |
| |
| கந்தமணி திண்புயனே கண்டியுரு மாலையுடன் |
| கழுவேறி மீள வருவீர் |
| கஸ்தூரி வாசகா ஆரங் குலுங்கிட |
| கழுவேறி மீள வருவீர் |
| |
| சுந்தரா யுதத்தனே காத்தவ ராயனே |
| சுகந்துகழு ஏற வாரீர் |
| துய்யனே பூலோகம் வையகம் தழைத்திட |
| துணிந்துகழு ஏற வாரீர் |