பக்கம் எண் :

52காத்தவராயன் கதைப்பாடல்

பந்தமாய் உனதுதிருப் பாதமது காணவே
   படுங்கழுவில் ஏற வாரீர்
பல்லாண்டு கூறினேன் என்மனைகாத்த தேசிகா
   மரக்கழுவில் ஏற வாரீர்
 
எந்தனுட வினையகல எந்நாளும் அருகிருந்து
   இக்கழுவில் ஏற வாரீர்
எங்கள் காமக்ஷி அருள்பெறவே கழுவிற்கு
   இப்போதே வருகு வாயே.
நடை
வருவாயென்று சொல்லி மலரடியைத் தெண்டனிட்டு
பிரியமுடன் தளவாய் பல்லாண்டு கூறிடவே
 
முன்னே அனுப்பிவிட்டு முத்துமுடி காத்தவனார்
பின்னாக முதலைப் பாருதனைத் தானேகி
 
மாலையற்கு சேதிவகை மேலாய் உரைகின்றார்
 
 
அந்தமுடன் கழுவேறத் தளவாய் வந்து
   அழைத்திடவே காத்தவனார் மாலை பக்கம்
பந்தமுடன் நடந்ததெல்லாம் விபர மாக
   பைங்கிளிக்குத் தானுரைக்க பாச்சூர் விட்டு
வங்கணமாய் கழுவேறி உன்னை யழைக்க
   வருமளவும் இங்கிருமென மகிழ்ந்து கூறி
விந்தையுடன் பாரைவிட்டு பாச்சூர் நாடி
   விரைந்தோடி ஐயனவர் வெளியில் வந்தாரே
 
 
முதலையாம் பாரை விட்டு
   மோகன தேசி யேறி
அதலவிதள சுதள நிதள
   பாதாள லோகமும் நடுங்கியே
 
கதறிட அரசர் போற்றும்
   கதிரொளி வர்ண னேபோல்
மதனவேள் சுந்தரக் காத்தான்
   வந்தனன் கழுவ டிக்கே.