|
| நடை |
| கழுவடியில் வந்துநின்று காத்த பரிமளமும் |
| தொழுது வணங்கி துய்யோனும் ஏணிவழி |
| |
| அன்னாள் உரைத்தபடி அபத்தமே வாராமல் |
| இன்னாளில் எந்தனுக்கு ஈஸ்வரியே மாகாளி |
| |
| அம்பலம் தன்னிலே நடன மாடிய |
| அன்னையே பத்திர காளியே |
| |
| அருள்வனம் தன்னில் பறவை கொன்றிட |
| அன்புடன் உன்னை தேடியே |
| |
| கம்பனையும் வென்ற தேவரீர் காளி |
| காளியே வன கூளியே |
| |
| கண்டுமே போற்றிட வாளுட கையும் |
| கையிலேந் திட்ட காளியே |
| |
| தும்பை சூடிப் பிறையணிந்திடும் |
| கூளியே மா காளியே |
| |
| சொல்லுநாள் அடியேனும் மாலையை |
| சிறையெடுத்து நான் கூட்டியே |
| |
| வம்பனாய்க் கழுவி லேறும் வேளையில் |
| வந்துநீ யருள்தந் தருள |
| |
| மலரடி தொழுத டியேன் உனக்கு |
| எதிர்வந் திடயிது சமயமே. |
| |
| நடை |
| காளி கொடுத்தருளும் கையருவாள் கிண்ணரியும் |
| நீலியவள் மாலைதனை நேசமுடன் தானழைத்து |
| |
| வாழி உமையவளே மனதில் நினைத்தருளி |
| தாயே காமாக்ஷி தானுரைத்த வாக்குப்படி |
| |
| மகா ஈஸ்பரருடனே வந்தருள வேணுமென்று |
| |
| கந்தன் கணபதியை கருத்திலே தான்துதித்து |
| பந்தமுடன் தான்நினைந்து பாடுகிறார் தேவாரம். |