பக்கம் எண் :

54காத்தவராயன் கதைப்பாடல்

பச்சை மால்தங் கையே
   பரமனார் இடபா கமதில்
இச்சையாய் கூடி வாழும்
   ஈஸ்பரி யம்மாள் கேளும்
நிச்சய மாலை தன்னால்
   நெடுங்கழு வேறச் சொன்ன
கச்சி காமாக்ஷி தேவி
   கடுக வந்தருள் செய்வாயே.
 
உச்சித மாக நீயும்
   உகந்து தான்சா பமிட்டாய்
நச்சர வணியே பூண்ட
   நாதனார் பாணியே கேளாய்
அச்சமே ஏது மின்றி
   அடியேனும் கழு விலேற
கச்சி காமாக்ஷி தேவி
   கடுக வந்தரு ளுவாயே
 
என்னையே உண்டு பண்ணி
   இனிது டன்சா பமிட்டு
பொன்னகர் தன்னி லென்னை
   போதவே பிறவு மென்று
அன்னையே கைலை வாழும்
   அரனிட பாக மாதே
கன்னிகா மாட்சிதேவி
   கடுக வந்தருள் செய்வாயே.
 
இக்ஷண மாக யானும்,
   இப்புவி தனிலு தித்து
அச்ச மதேயில் லாமல்
   ஆரிய மாலை தன்னை
நற்சிறை எடுத்து என்னை
   தூண்டியில் ஏறச் சொன்ன
கட்சி காமாக்ஷி தேவி
   கடுக வந்தரு ளுவாயே