பக்கம் எண் :

காத்தவராயன் கதைப்பாடல்7

நன்றியுரை
 
     நாட்டுக் கதைப் பாடல் வரிசையில் சில நூல்களை வெளியிட மதுரைப் பல்கலைக்கழகம் முன்வந்துள்ளது. துணைவேந்தர் தெ.பொ.மீ. அவர்கள் நாட்டுப் பாடல்களையும், நாட்டுக் கதைப் பாடல்களையும், வாய்மொழி இலக்கியமாகவும், இலக்கியத்தின் இரண்டு ஓடைகளில் ஒன்றெனவும் கருதுகிறார்கள். அதனால்தான் இவ்வெளியீடுகளைக் கொணர முயன்று வருகிறார்கள்.
 
     அவர்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். தமிழகமும் இச்சீரிய பணிக்காக அவர்களுக்கும், மதுரைப்பல்கலைக் கழகத்திற்கும் பெரிதும் கடமைப்பட்டுள்ளது.
 
 
பாளையங்கோட்டை                      நா. வானமாமலை
21-9-70                                    பதிப்பாசிரியர்