|
கதைப்பாடல் |
சமையமெனும் கோமுதலைப் பாருதனில் |
தானொளிக்கத் தயங்கி யுள்ளம் |
அபையமென வேதியர்கள் அரசனிடம் |
முறையிடவே அவர் வந்தாரே. |
|
கையிலே குலையும் பிடித்துக் |
கதறியே மறையோ ரெல்லாம் |
அய்யமார் பூணூல் குடுமி |
அறுத்துச் கொண்ட பயமிட்டு |
|
“செய்யனே ! சீமை யாளும் |
தீரனே ! ஆரியப்பா ! |
அய்யனே சிறை யெடுத்தான் |
ஆரென்று கேட்பீர் நீரே.” |
|
வசனம் : ராஜாதிராஜா ராஜபரமேஸ்வரா ராசமார்த்தாண்ட ராச ஒய்யார அரசுபதியாக திருசிரபுரம் ஆளப்பட்ட ஆரியப்பூராசனே பிறாதய்யா பிறாது. |
நடை |
வேதியர்கள் தன்முறை விளம்பியந்த ராசனவர் |
ஆதி மறையவர்க்கு அன்பாய் நமஸ்கரித்து’ |
|
“ஏது மறையவரே இறைவரியால் நொந்ததுண்டோ? |
|
மாது சிறைபோனதுண்டோ? மாடாடு சேதமுண்டோ? |
விள்ளவே எந்தனுக்கு விரும்பி உரையுமென்றார்” |
|
“கேட்டிடுவீர் எங்களுட பிராது தன்னை |
கிளிமொழியாள் நானீன்ற மாலை தானும் |
|
நாட்டமுடன் குடமெடுத்து தண்ணீர் மோர்க்க |
நடந்தாள் காண் கொள்ளடத்து நதியை நாடி |
|
வாட்டமில்லா சேப்பிளையான் மகனில் லாமல் |
வளர்த்தான் காண் பிரமய்லே மகனென்றே தான் |
|
தேட்டமொடு காத்தவனாம் அவன் பேர்தான் |
சிறையெடுத்தான் எங்கேயென்று தேடு வீரே” |
அய்யர் சொல் விருத்தம். |
“தேடியே நீரவனைப் பிடித்து உந்தன் |
தேசமது அறிந்திடவே கழுவி லேற்றி |
பாடியே அவனுயிரைக் கொல்லா விட்டால் |