பொருந்தி இருந்தோமோ, பிள்ளைகளைப்
பெற்றோமோ.
பணியாரம் சுட்டசட்டி பாதிமணம் போகலையே.
பந்தல் பிரிக்கலையே வந்தஜனம் போகலையே,
எம்கணவா, எம்கணவா, இந்த விதி வருவானேன்?
சண்டாள வன்னியர்கள் சதித்தாரே கணவரைத்தான் |
பின்பு
அவர்கள் பட்டனது உடலை மலையோரத்தில் இலைகளால்
மூடிவைத்துவிட்டுக் கணவனோடு, தீப்பாய உத்தரவு கேட்க சிங்கம் பட்டி
அரண்மனைக்கு வந்தார்கள். சிங்கம்பட்டி மன்னன் நடந்த தென்ன வென்று
கேட்டான். அவர்கள்,
................
மன்னா துணைவனும் உயர் குலத்தான்,
வல்லமையாகவே தான் மணஞ் செய்தார் எங்களைத்தான்
கள்ளரோடு யுத்தஞ்செய்து எம்கணவரும் மாண்டுவிட்டார்
வள்ளலின் பாதஞ்சேர வரம்தர வேணும். |
என்று சொன்னார்கள், மன்னன் தன் அரண்மனையில்
கவலையில்லாமல் தன்
மனைவி மாரோடு வாழ அழைத்தான் அவர்கள்.
மங்கிலியப் பெண்கள் எம்மை நகைப்பாரே,
வாலைப்பகடை நம்மை இதற்கோ வருந்திப் பெற்றான்?
சங்கடத்தைப் பார்ப்பதற்கோ, சண்டாளிகள் போய்வாரோம். |
என்று சொல்லித் திரும்பினார்கள்.
மன்னன் மனமிளகி அவர்களை
அழைத்துத் தீப்பாய அனுமதியளித்தான். சந்தனக் கட்டை யடுக்கி பூம்பந்தல்
போட்டுக் கொடுத்தான். பட்டன் உடலில் பரவும் போது அவனது
இருமனைவியரும் தீக்குளித்து உயிர் விட்டார்கள்.
ஆகாயத்திலுள்ள
தேவர்கள் எல்லோரும் முத்துப்பட்டன்,
பொம்மக்காள், திம்மக்காள் ஆகிய மூவரையும் வாழ்த்தினார்கள்.
இதுவே
பல்வேறு வடிவங்களில் வழங்கும் முத்துப்பட்டன்
வில்லுப்பாட்டின் கதை. இக்கதை அச்சுப்புத்தக வடிவமாக
வெளியிடப்பட்டுள்ளது. இக்கதைப்பாடல் நெல்லையில் வழங்கும்
வில்லுப்பாட்டு ஏடுகள் சிலவற்றை ஒப்பு நோக்கி எழுதப்பட்டது.
|