| முத்துப்பட்டன் 
            கதை - ஆராய்ச்சி | 
         
       
           தமிழிலக்கிய 
        வரலாற்றில் காலத்தை நிர்ணயிப்பது மிகவும் கடினமான  
        காரியமென்பதை யாவரும் அறிவர். நாட்டுப்பாடல்களின் காலத்தைக்  
        கணிப்பது இலக்கியப்படைப்புகளின் காலத்தை நிர்ணயிப்பதைவிடக்  
        கடினமானதே சமீபத்தில் நடந்த நிகழ்ச்சிகளைக்கூட பலவாறாகத் திரித்துக்  
        கதையாக்கும் போக்கு இன்றும் இருக்கிறது. ஆயினும் இக்கதையின்  
        நிகழ்ச்சிகள் குறிப்பிடும் காலம் எது வென்பதைச் சில சான்றுகள் கொண்டு  
        நிர்ணயிக்கமுடிகிறது. 
         
             காலம் 
        : வில்லுப்பாட்டு, முத்துப்பட்டனைப் பற்றிக் கூறும் விவரங்கள்  
        வருமாறு : அவன் தென் ஆரிய நாட்டில் பிறந்தான். அவன்  
        கொட்டாரக்கரையில் ராமராஜன் அரண்மனையில் பணிபுரிந்தான். அவன்  
        சகோதரர்களோடு ஊர் திரும்பும்போது, ஆரியங்கோவில், சவரிமலை,  
        பொதிகைமலை வழியாகத் தனவாய்க் கொட்டகைக்கு வந்தான்.  
        பாபநாசத்தருகிலுள்ள அரசடித் துறையில் நீர் குடித்தான். அவனது  
        மனைவியர், சிங்கம்பட்டி மன்னனிடம் தீக்குளிக்க அனுமதி கேட்டனர்.  
        சம்பவங்கள் நிகழ்ந்த இடங்களை இச்செய்திகள் குறிப்பிடுகின்றன. 
            இச்சம்பவங்கள் 
        நிகழ்ந்த பகுதி இன்று திருநெல்வேலி மாவட்டத்தின்  
        ஒரு பிரிவாகவும், கேரள மாநிலத்தில் ஒரு பிரிவாகவும் காணப்படுகிறது.  
        மேல் மலைத்தொடரின் தென் பகுதியில் கொண்ட நிலப்பகுதி இருபிரிவிலும்  
        உள்ள சிற்றூர்களனைத்தும் ஆரிய நாடு என்று அழைக்கப்பட்டது. 
            இதற்குக் 
        குற்றாலக் குறவஞ்சியில் சான்று உள்ளது. பொதிகைமலைக்  
        குறத்தி தன்னுடைய நாட்டைப் பற்றிக் கூறும் போது, குற்றாலம் உள்ளிட்ட  
        மேல் மலை நாட்டை, ‘திருக்குற்றாலர் தென் ஆரியநாடு’ ‘கடவுள் ஆரிய  
        நாடெங்கள் நாடே’ என்று வருணிக்கிறாள். கர்நாடக ராஜாக்கள்  
        சரித்திரத்திலும் இப்பகுதி ‘ஆரிய நாடென்று குறிப்பிடப்பட்டுள்ளது.  
        நாயக்கமன்னர் சாசனத்தில் தென்காசி முள்ளி நாட்டின் தென்பால்  
        ஆரிய நாடு என்று இப்பகுதி குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பகுதி கடந்த 350  
        வருஷங்களாக திருவனந்தபுரம் அரசர்கள் ஆட்சியில் இருந்து வந்தது.  
        மார்த்தாண்ட வர்ம ராஜாவும் தளவாய் ராமமையனும் மலையாள  
        ராஜ்யங்களை இணைத்து டச்சுக்காரரை எதிர்க்கும் சமயத்தில்  
       |