பக்கம் எண் :

அண்ணன்மார் சுவாமி கதை475

அன்று தந்த வாக்கு இன்றைக்கு அபத்தமாய் போச்சுதென்றால்
தெய்வலோகம் விட்டு நாங்கள் பூலோகம் போவதில்லை
மகாதேவர் முன்னே நின்று தெய்வகன்னிகள் வழக்குரைத்து நிற்கையிலே
வழக்குகள் தானுரைத்து கன்னியர்கள் வாக்கு மனுகேட்கையிலே
சித்தம் திரும்பியே தான் சுவாமி சிவனார் மனந்திரும்பி
தெய்வ கன்னிகளை யழைத்து ஈஸ்வரனார் திருவாக்குச் சொல்லுகிறார
 

மாண்டவர்கள் எழுந்திருக்க
சுவாமி வரம் கொடுத்தல்
 

மாண்டவர்கள் எழுந்தருள தெய்வகன்னி வாக்கு மனுத்தந்தேனிப்போ
இறந்தவர்கள் எழுந்தருள குமாரசங்கருக்கு ஈடேற்றம் தந்தேனினி
நெற்றியிலே பட்ட அம்பு குமாரசங்கருக்கு நேராகப் பாய்ந்ததது
கட்டியிலை பிடித்து குமாரசங்கருக்கு காயம்பொருந்தவேதான்
பொன்னூசி பொன்சரடு ஈஸ்வரனார் பொருந்த வரங்கொடுத்தார்

வாடாத்திருமாலை சுவாமியுட வாங்கழுத்தில் சூடினது
வாக்கு மனுக்கொடுத்து மகாதேவர் மாலையுடன் தான் கொடுத்தார்
அந்த வாக்கு மனுவையெல்லாம் தெய்வகன்னி வாங்கி மடியில் வைத்து
சுவாமி பாதஞ்சரணமென்று கைலாச கன்னிகள் பாதாரம் போற்றி செய்து
வாக்கு மனுவாங்கி தெய்வகன்னிகள் வாரார்கள் பூலோகம்