பக்கம் எண் :

476அண்ணன்மார் சுவாமி கதை

பொன்னேணி வழியாக தெய்வகன்னிகள் நூலேணி வந்திறங்கி
நூலேணி வழியாக கன்னியர்கள் பூலோகம் வந்திறங்கி
பட்ட படுகளத்தில் குமாரசங்கருட பாரக்குலகளத்தில்
சென்ன குலகளத்தில் தெய்வகன்னிகள் சேரவே வந்து நின்று
அண்ணருட தங்கையரைக் கன்னியர்கள் அருகில் வரவழைத்து

வாக்கு மனுவையெல்லாம் நல்லதங்கம் வாங்கிவந்தோம் உத்தமியே
அந்த மொழிகள் சொல்ல உத்தமி அப்போ மனங்குளிர்ந்து
சிவனைத் தொழுது ஸ்ரீராமரைத்தானினைந்து
வாக்கு மனுவையெல்லாம் உத்தமி வாங்கி மடியில் வைத்து
நெற்றியிலே பட்ட அம்பு சங்கருக்கு நேராகப் பாய்ந்த தைத்தான்

கட்டியிலை பிடித்து உத்தமியாள் காயம் பொருதுகிறாள்
பொன்னூசி பொன்சரடு கோர்த்து பொருதுகிறாள் காயத்தை
கட்டியிலை பிடித்து அண்ணருக்கு காயம் பொருதியேதான்
சுவாமியுட வாடாத் திருமாலை சங்கருட வாங்கழுத்தில் சூடியேதான்
சுவாமியுட அரளிப்பூமாலையிட சங்கருக்கு ஆபரண மாலையாச்சு

மாலைப் பொலிவழகும் சங்கருட மார்பின் திருவழகும்
சேலை கட்டும் சீரழகும் சங்கருட சீரான கட்டழகும்
மாலை சுத்தம் திருக்கழுத்தில் மாணிக்கமாலை மார்பில் துலங்குதப்போ
அரக்குதிரு மேனியிலே சங்கருக்கு அழுத்தினது சீராவும்
முன்னழகும் பின்னழகும் சங்கருட முகத்தின் திருவழகும்

அழகும் திருவடிவும் ஆதிபரமேஸ்வரர்க்கு ஒப்பிடலாம்
கிழக்கெழுந்த சூரியன் போல் சங்கர் வடக்கு முகம் பார்வையுமாய்
பள்ளிகொண்ட பாவனையை சங்கரைப் பார்க்க முடியாதே