தங்கை அண்ணரை எழுப்ப ஓமம் வளர்த்தல் | தன் கோத்திரத்துக்குள்ள உத்தமி சாஸ்திரங்கள் செய்வதற்கு நாலு மூலை கோட்டையிட்டு நாலு கொத்தளங்கள் தான் வளைத்து நாலுமூலை கோட்டைக்கு நாலு தலைவாசல் விட்டு நாலு தலைவாசலுக்கு உத்தமி நாலுகும்பம் தரித்து வைத்து பதினாறு திக்குக்கும் உத்தமி பாங்காய் கலசம் வைத்து எந்தத் தலைவாசலிலே சிவசிவ நான் ஓமம் வளர்ப்பதினி மேற்கு தலைவாசல் கைலாச வாசல் மேட்டு வாசல் தானாச்சு தெற்கு தலைவாசல் கைலாசம் சொர்க்க வாசல் தானாச்சு கிழக்கு தலைவாசல் சுவாமியுட கொலுவிருக்கும் வாசலது வடக்கு தலைவாசல் மாயன் பதியிருக்கும் வாசலது எந்தத் தலைவாசலிலே சின்னண்ணருக்கு ஓமம் வளர்த்திடுவேன் என்று மனதிலெண்ணி உத்தமியாள் நல்ல தங்கை நாலுமூலை கோட்டைக்குள்ளே அது நடுவே அரண்மனையும் அரண்மனையுந்தான் வளைத்து அதன் முன்னே ஆசாரமேடையிட்டு பெரியண்ணர் தருமரிருந்து இது சமாதானம் பேசுமிடம் சின்னண்ணர் வீமர் இருந்து இது வீரியங்கள் பேசுமிடம் அத்தை மக்கள் மூவரும் இதுசுத்தி கொலுவிருக்குமிடம் அவர்கள் கொலுவிருக்குமது இது ஆசார மேடையென்று அக்கினியை உண்டுபண்ணி உத்தமி யாகம் நிறைவேற்ற சுப்பிவகை போட்டு துரிதாக அக்கினியை உண்டுபண்ணி அக்கினியை உண்டுபண்ணி உத்தமி அதன்மேலே தேன் சொரிந்து பஞ்சாங்கம் ஓதி உத்தமியாள் பரமனை அடிதொழுது நெஞ்சார அஞ்செழுத்தை உத்தமி நீதிபடவே நினைத்து | | |
|
|