| "கடலைக் குதிக்கின்றேன் - அண்ணா நான் கருமலையைத் தாண்டுகிறேன்! விண்ணைக் குதிக்கின்றேன் - உன்னைக் கொண்டு வேகமாய்ப் பறக்கின்றேன்" --- இந்தக் கதையதனை எழுதிப் படித்தவர்கள் இன்னுமே சொல்லுமென்று இயல்பாகக் கேட்டவர்கள் பெரியக்காண்டி தன்னருளால் பிரபலமாய் வாழ்ந்திருப்பார் பொன்னர் சங்கர் கிருபையினால் புகழுடனே வாழ்ந்திருப்பார் ஈஸ்வரனார் கிருபையினால் இயல்பாக வாழ்ந்திருப்பார் ஆல்போல் தழைத்து அறுகதுபோல் வேரூன்றி மூங்கில்போல் சுற்றம் முசியால் வாழ்ந்திருப்பார் வாழிமிக வாழி வையகமும் வாழியவே! | | |
|
|