பக்கம் எண் :

528அண்ணன்மார் சுவாமி கதை

வாழி
 

  முடியுயர்ந்த சென்னியங்கிரி வேலா! தேவா!
மொழிகிருபை ஊஞ்சல்பத்தும் பதிகம் பாடக்
குடிசெழித்துக் குலம்பெருகப் பெரியக் காண்டி
குன்றுடையான் மக்கள் பொன்னர் சங்கரோடு
அடிதவறா நல்லதங்கம் அத்தை பிள்ளை
அழகுமகா முனி சாம்பான் இனிதே வாழ்க!
படியிலிதை நினைப்போர் அச் சிட்டோர் கேட்டோர்
பாடியவர் செல்வமெலாம் பெற்றே வாழ்க!